Wednesday, November 11, 2026

புத்தளம், மதுரங்குளி மேர்ஸி கல்வி வளாகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது: அகில இலங்கை மட்டத்தில் 3ம் இடம்.

1 min read

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் மூலம் 2025/2026ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில், மேர்ஸி கல்வி வளாகம் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) (08) அன்று  நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவிலேயே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

​கல்வித் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், சிறந்த நிர்வாக முறைகளைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட இந்தப் போட்டியில் மேர்ஸி கல்வி வளாகம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

​இந்த மாபெரும் சாதனையின் பின்னணியில் வளாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அர்ப்பணிப்புடன் உழைக்கும் அதிபர், ஆசிரியர்கள், அனைத்து ஊழியர்களின் தூய எண்ணம், கூட்டு முயற்சி , அயராத சேவைகளுக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களினதும் ஒத்துழைப்பிற்கும் கிடைத்துள்ள உன்னதமான அங்கீகாரமாகும்.

​இந்த வெற்றியானது மேர்ஸி கல்வி வளாகம் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைப்பதற்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.