Wednesday, November 25, 2026

பாடசாலைகளை ஒன்றிணைக்கும்போது போக்குவரத்து வசதிகள் கட்டாயம்: பிரதமர்

1 min read

பாடசாலை மீளமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளின்போது, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவது கட்டாயமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அந்தந்த பிரதேசங்களின் நிலைமைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எவ்விதத் தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் தமது தாய்மொழியில் கல்வி கற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பாதுகாவலர்களை நியமிப்பதும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவம்பர் 23ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.