வடக்கு தீவுகள் பெற்றமை வணிக நடவடிக்கைகளுக்காகவே | சீனா

Date:

வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையென சீனா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதனை வெளியிட்டுள்ள சீனா, சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமையவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும் நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை பிராந்தியத்தில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமாக மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்ய முடியுமென சீனா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை வட பகுதியிலுள்ள 03 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...