அசாத் சாலியை கைது செய்ய முடியுமென்றால் ஏன் விஜயதாச ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது? | முஜிபுர் ரஹ்மான்

Date:

இன்று(17) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பனர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கரைத்துக்களின் ஒரு பகுதி.
இன்று நாட்டில் பலவேறு பிரச்சிணைகளை அரசாங்கமே உருவாக்கியுள்ளது.சௌபாக்கியத்தின் தொலநோக்கை நடைமுறைப்படுத்த வந்தவர்கள் இன்று நாட்டை பின்நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
இன்று 80% அத்தியவசியப் மொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு குறித்தும் சௌபாக்கியத்தின் தொலைநோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இன்று பாரிய சுற்றாடல் சார்ந்த பிரச்சிணையை அவர்களாகவே ஏற்படுத்தியிள்ளனர்.
ஊழல் தொடர்பாக கூறினர்.ஆனால் இன்று இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை குறைத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சிணைகளை மக்களுடமிருந்து மறக்கடிக்க கால் துடைப்பத்தில் தேசியக் கொடி பதித்ததை கொண்டு வந்து முயற்சித்தனர் அது தோல்வியில் முடிவடைந்தது. நிகாப் விவகாரத்தை கொண்டு வந்தனர்.இன்று அதுவும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.கொலைக் குற்றச் சாட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றம் வந்த நாள் பிரதமர் மஹிந்த மாடறுப்புத் தடை குறித்து அறிவித்தார்.அன்று அது தான் பிரதான செய்தியாக மாறியது.
இன்று சீனி ஊழலை மறைக்க புர்கா தடையை முன்னிலைப்படுத்தி இனவாதம் வர்க்க வாதம் போன்ற எண்ணப்பாடுகளை தூன்டிவிட முயற்சிக்கின்றனர்.இனங்களுக்கிடையே சந்தேக எண்ணங்களை ஏற்ப்படுத்த முயல்கின்றனர்.நாட்டில் ஓர் இனக் குழுமத்தின் ஆடை தொடர்பாக மாத்திரம் கூற முடியாது.பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்தாலும் அது ஒரு பொது நீதியாக முன்வைக்ப்பட வேண்டும். முகத்தை முழுவதும் மூடிய முகக் கவசமுள்ளது.எனவே இவை குறுத்து கவனம் செலுத்தி பொது நீதியாக வர வேண்டும். ஒரு இனக் குழுமத்தின் ஆடை மாத்திரம் தடை செய்யப்பட முடியாது.
சரத் வீரசேகர அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ள ஒர் விடயத்தை சமர்ப்பிக்க முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தி பகிரங்கப்படுத்துகிறார்.இவ்வாறான கலாசாரம் இதற்கு முன்னர் நாட்டில் இடம் பெற்றில்லை. நகைப்பு என்னவென்றால் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அவ்வாறு ஒன்றும் இல்லை.அவ்வாறு தடை குறித்து எந்த முடிவும் இல்லை என்று அறிக்கை வெளியிடுகிறார்.சரத் வீரசேகரவின் கருத்திற்கு பாகிஸ்தான் தூதுவர் டுவிடரில் தொரிவித்த விடயத்தை கருத்திற் கொண்டு வெளி விவகார அமைச்சின் செயலாளர் அறிக்கை வெளியிட்டார்.இது நகைப்பான விடயமாகும். அரசாங்கம் பெறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.ஜெனீவா விவகாரத்தில் ஆதரவைப் பெறவே,கையாளவே அவசர அவசரமாக வெளி விவகார அமைச்சு தலையிட்டு அறிக்கையிட்டது.
மறுபக்கம் வெளி விவகார அமைச்சு அறிக்கையிட்டதால் உள்ளக பிரச்சிணையை அரசாங்கமே உலகிற்கு கொண்டு சென்றுள்ளது.இன்று இந்த அறிக்கையை சர்வதேச நாடுகள் பார்த்துள்ளன.
முதுகொலும்புள்ள அரசாங்கம் உறுதியான தீர்மானமெடுக்கும் அரசாங்கம் என்று என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இ்ன்று இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
சரத் வீரசேகர ஒரு மதப்பிரிவினரின் ஆடை குறித்து தெரிவித்த கருத்துக்கள் இந் நாட்டில் ஏனைய சமூகங்களுக்கிடையிலான சந்தேக எண்ணங்களை தோற்றுவிப்பதாக உள்ளதால் ICCPR சட்டம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
இந் நாட்டில் படித்த தொழிநுட்ப அறிவு காரணமாக தற்போதுள்ள இளைஞர்கள் சகலவற்றினதும் அறிவு படைத்தவர்களாக உள்ளனர். முற்போக்காக சிந்திக்கின்றனர். நீதியின் பக்கம் செல்கின்றனர். சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கின்றனர்.இவற்றை நாம் வரவேற்க வேண்டும்.நா நாடாக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.நாட்டின் பெதுப் பிரச்சிணைகள் குறித்து பேசும் இளைஞர்களை நாம் வரவேற்க வேண்டும்.ஆனால் அன்மையில் தொலைக்காட்சியில் ஒரு பிள்ளை தெரிவித்த உன்மையான செய்திக்காக இன்று பொலிஸாரை அனுப்பி வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.இந்த அரசாங்கம் வெட்கிக்க வேண்டும்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ தனியார் ஊடகமொன்றில் தான் குறித்து அன்மையில் தெரிவித்த கருத்திற்கு பதில் வழங்கினார்.இக் கருத்து தொடர்பாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்‌ஷ கூறியவை தெடர்பான மேலதிக விசாரணையை வேண்டுவதாகவும் அவ்வாறு உறுதியற்ற தகவல் வழங்கியிருப்பின் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை வேண்டவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...