பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று ஷவேந்திர சில்வா வெளியிட்ட புதிய செய்தி..!

Date:

கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் மக்கள் அளித்த ஆதரவுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.அத்தோடு அடையாள இலக்கணத்தின் வரிசையில் மக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும் கூட தொழிலுக்கு செல்பவர்களுக்கு அந்த நடைமுறை செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது

பயணத் தடைகள் நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒன்று கூட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றினால் அடுத்த 2-3 வாரங்களில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இராணுவத் தளபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையில், குறைந்த அறிகுறிகளைக் காட்டும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீட்டு சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்களை வரும் நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...