முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளை பிரதமரிற்கு நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்திய சுமந்திரன் எம்.பி!

Date:

பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நினைபடுத்த விரும்புகிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நான்கு லட்சம் பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தாகவும், அதேபோன்று, தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், வடக்கு கிழக்கு மக்களை மீள்குடியேற்றினோம் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோன்று, நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் மஹிந்த உரையாற்றினார்.

இதன்போது குறிக்கிட்டுப் பேசிய சுமந்திரன், பன்னிரென்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இதே நாளில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகிறேன் என்றார்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...