அமெரிக்காவின் வழமையான இரட்டை வேடத்தையே ஜனாதிபதி ஜோய் பைடனும் பூண்டுள்ளமை புலப்பட்டது

Date:

காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் வன்முறைக்குப் பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குரல் கொடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீன
ர்களுக்கும் இடையிலான மோதல் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில் அங்கு சமாதானத்திற்கான அல்லது தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கான எந்த அறிகுறியும் இன்னமும் தென்படவில்லை.

நேற்று இரவு முழுவதும் இஸ்ரேலிய எல்லையை நோக்கி ஹமாஸ் இயக்கத்தின் ரொக்கட்டுகள் சீறிப் பாய்ந்த வண்ணம் இருந்துள்ளன. பதிலுக்கு இன்று காலையிலேயே இஸ்ரேல் தன்னுடைய வான் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக சற்று முன்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8 தினங்களாக இடம்பெற்றுவரும் மோதல்களில் பலஸ்தீன தரப்பில் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவர். இஸ்ரேலியத் தரப்பில் 10 பேர் இரந்துள்ளனர்
அவர்களுள் இருவர் சிறுவர்களாவர் என்று இரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் தரப்பில் 150க்கும் மேற்பட்ட
போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறுகின்றது. ஆனால் ஹமாஸ் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இருப்பதோடு தனது தரப்பு உயிரிழப்புகள் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில்
பலஸ்தீனப் பிரதேசத்தில் யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதை தான் ஆதரிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பிடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி மத்திய கிழக்கில் தனது நேச நாடுகளான எகிப்து மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இது தொடர்பான முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தக் கருத்துக்கு முற்றிலும் மாறாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மூன்றாவது தடவையாகவும் மத்திய கிழக்கு யுத்த நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப் படுவதை அமெரிக்கா தனது அதிகாரங்களை பயன்படுத்தி தடுத்துள்ளது.

சீனா ஈரான் ஆகிய நாடுகள் இந்த விடயத்தில் அமெரிக்காவை கடுமையாக சாட்டியுள்ளன.

அதுமட்டுமன்றி இதே காலப்பகுதியில் அமெரிக்க காங்கிரஸ் இஸ்ரேலுக்கான பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத விற்பனைக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது அமெரிக்க புதிய நிர்வாகம் கூட அதன் ஆரம்ப கட்டத்திலேயே மத்தியகிழக்கு விடயத்தில் இரட்டை வேடம் போடுவதை இந்த நிலைப்பாடுகள் நன்கு புலப்படுத்தி உள்ளதாக சர்வதேச ராஜதந்திர வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

காணொளி

https://www.bbc.com/news/world-middle-east-57152723

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...