பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறானவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிக்காட்டல்களை பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.
நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த வழிக்காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவும் கொவிட் தொற்றுடன் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி நிலவுவதால் அதனை கருத்தில் கொண்டே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.