நாளை (25) எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப் பகுதியில் சில்லறை கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.