கொரோனா நோயாளர்கள் குறித்து வௌியாகியுள்ள சுற்றுநிருபம்!

Date:

வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் தாமதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பலர் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களை வைத்தியசாலை வார்டுக்களில் தரையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் இருந்து அறிக்கையொன்று கோரப்பட்டிருந்தது.

அத்துடன் வைத்தியசாலைகளில் இடம் இல்லாவிட்டால் எந்தவொரு நோயாளிகளையும் தரையில் படுக்க வைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வைத்தியசாலை பொறுப்பாளர்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...