தொடரும் மழை காரணமாக களுகங்கையின் தாழ் நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு தொடர்ந்தும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹொரணை, அகலவத்தை, இங்கிரிய, பலிந்த நுவர, புளத்சிங்கள, தோதங்கொடை, மில்லெனிய, மதுரவல மற்றும் களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடரும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.