எங்கள் குடிமக்களை வழக்கம் போல் பரிசோதிக்கும் எலிகளாக மாற்றும் சமீபத்திய நாடகத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. அந்த சுற்றுலா பபல் அமைப்பின் கீழ் யால உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பதன் மூலம் இதற்கான வாயில்களை திறந்துள்ளது. இந்த நாட்டின் மக்களின் வாழ்க்கையுடன் எந்த வரையரைகளுமின்றி விளையாடுவது அரசாங்கத்தின் வழக்கமான கொள்கை என்று அரச அதிகாரிகள் பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.
உலகின் கொரோனா பேரழிவின் ஆரம்பத்தில் உலகின் அனைத்து நாடுகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் நாடுகளுக்குள் பிரவேசிப்பதை தடைசெய்த போது, சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான விளம்பரப்படுத்தகள்களை மேற்கொண்டு கொரேனாவையும் சுற்றுலாப் பிரயாணிகளையும் கொண்டுவந்த ஒரு அரசாங்கமாக இலங்கை இருந்தது.பின்னர் இரண்டாவது அலை தொடங்கியபோது உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பரவுமா என்பதை பரிசோதிக்க உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு வந்து, பொறுப்பற்ற பதில்களை வழங்கிய அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் இடம் பிடிக்கிறது.
இந்த சமீபத்திய முடிவுகள் அந்த தீய நோக்கத்தின் மற்றொரு நீட்டிப்பாகும்.இதனடிப்படையில் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
1. நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளுடன் முடக்கல் முறையும் நடைபெற்று வரும் வேளையில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதன் மூலம் நாட்டிற்கு ஏற்படவிருக்கும் அழிவின் விளக்கம் என்ன?
2. இலங்கை குடிமக்களை இரண்டாம் தர குடிமக்களாக வகைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் நோக்கம் என்ன?
3.ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு வருகை தர வேண்டாம் என்று தங்கள் குடிமக்களிடம் கோருகின்ற சூழ்நிலையில், உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பேரழிவுமிக்க புதிய கொத்தனிக்கு கதவைத் திறக்கவா எங்கள் அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்?
4. உலகெங்கும் பரவி வரும் தொடர்ந்து உருமாறிவரும் புதிய கொரோனா வகைகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கிறது என்பதற்கும் அது அவ்வாறு இல்லை என்றால் அவ்வாறு இல்லை என்று அரசாங்கத்திற்கு என்ன உத்தரவாதம் அளிக்க முடியும்?
5. உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்க மிகவும் பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.ஆனால், ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் இனம் காணப்படுவதும், இறப்பு எண்ணிக்கை ஆபத்தான முறையில் உயர்ந்துள்ளதுமான நிலையில், அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை வேண்டுமென்றே இந்த நாட்டை பயங்கரமான ஆபத்தில் தள்ளுகின்ற இத்தகைய பெறுப்பற்ற மற்றொரு பேரழிவு செயல்முறையின் பொருள் என்ன?
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்களின் துன்பத்தைத் தணிக்க, மனித உயிர்களுடன் விளையாடும் இந்த கொடூரமான நாடகத்தை உடனடியாக அரசாங்கம் நிறுத்தி, மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்பது அதன் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது முதன்மை நிகழ்ச்சி நிரலாக அமைய வேண்டும்.