உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள்!

Date:

பொலன்னறுவை – எலஹெர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் போதுமானளவு உரங்கள் பயன்பாட்டில் இல்லாமையால் தமது உற்பத்திகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேச செயலக பிரிவிலுள்ள நிகபிட்டிய, கோட்டபிட்டிய, அதரகல்வெவ மற்றும் ஜெயசிரிபுர ஆகிய பகுதிகளிலுள்ள உற்பத்தியாளர்களே பெரிய வெங்காயத்தை பயிரிடுகின்றவர்கள். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு காரணமாக தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமலுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அளவு உரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...