பரவிவரும் கொரோன தொற்றை கட்டுப்படுத்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நுவரெலியா, திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.