பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

Date:

ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வருடாந்தம் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் பால் மாவினை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்கிறது.

தற்போது நாட்டின் பால் மா தேவையில் 75 சதவீதமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் சர்வதேச சந்தையில் பால் மாவின் கேள்வி மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை புள்ளிவிவரங்களின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது நாட்டில் 4 முதல் 6 வாரங்களுக்கு தேவையான பால் மா தொகையே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...