பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொலன்னறுவை மஜீதிய்யா அறபுக் கல்லூரியின் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துல் மஜீத் அவர்கள் காலமானார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் அனுதாபச் செய்தி
பொலன்னறுவை முஸ்லிம்களுடைய முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்ட ஒருவர். அவருடைய இழப்பு பொலன்னறுவை மாவட்ட முஸ்லீம்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மஜீத் அவர்கள் மென்மையான, மார்க்கப் பற்றுள்ள ஒருவர்.தன்னுடைய அரசியல் பயணத்தை சமூகத்திற்காகவே முழுமையாக வாழ்நாள் முழுவதையும் செலவழித்த ஒருவர். 1990 ம் ஆண்டு யுத்த காலத்திலே பொலன்னறுவை எல்லைப் பகுதியில் உள்ள முஸ்லீம்களை பாதுகாப்பதில் அரும்பாடு பட்ட ஒருவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலிலே வடமத்திய மாகாணத்திலே போட்டியிடுகின்ற தீர்மானத்தை எடுத்த போது மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க என்னோடு முழுமையாக இரண்டு நாட்கள் பொலன்னறுவை மாவட்டமும் சென்று எங்களுக்கு வேட்பாளர்களை தந்து அம்மாவட்டத்திலே கட்சி போட்டியிடுவதற்கும் அதே நேரத்திலே வடமத்திய மாகாணத்திலே எமது கட்சி உருவாவதிலே அரும் பாடுபட்ட ஒருவர்.
அவரால் உருவாக்கப்பட்ட மஜீதிய்யா அரபுக்கல்லூரி, நகர ஜும்ஆப் பள்ளிவாயல் போன்ற பள்ளிவாயல்களை மட்டுமன்றி மார்க்க விடயங்களுக்கான அவரது பணி மகத்தானது.
அவரால் உருவாக்கப்பட மஜீதிய்யா அரபுக்கல்லூரி இன்று நாடறிந்த அரபுக்கல்லூரியாக மாற்றம் பெற அவரது உழைப்பு அளப்பரியது.
மிகவும் அமைதியாக , சுவாரசியமாக அளவளாவக் கூடிய ஒருவர். காராளுமன்றத்திலே என்னோடு ஒன்றாக இருந்த ஒருவர்.
அவரது மரணச் செய்தி கேட்டு நான் ஆழ்ந்த கவலை அடைகின்றேன். அவருக்கு அல்லாஹ் மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌசை வழங்குவானாக ஆமீன்