மேலும் 2,205 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Date:

நாட்டில் மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 246,091 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 211,186 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,769 ஆக அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத்...

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு...