இந்திய அணிக்கு சவாலான வெற்றி இலக்கு!போட்டி தொடர்கிறது!

Date:

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

 

போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் ஹசலங்க அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

 

மேலும், அவிஷ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில்  சகால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.அதன்படி, இந்திய அணிக்கு 276 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...