கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அசாங்கம் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகபூர்வ அரசு இல்லத்தை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்காக குறித்த இல்லத்தை வாடகைக்கு விடத் தயார் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால் அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக ஆடம்பரமான அரசு இல்லத்தில் பிரதமரும் ஆளுநர் மாளிகைகளில் ஆளுநர்களும் தங்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கிரே பட்டியலில் வைத்திருப்பதால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.