ஆக்கம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்.
புலனாய்வுப் பத்திரிகைக்கலை இன்று உலகில் பிரபல்யமான பத்திரிகைக் கலையாக மாறி வருகிறது.
பிரித்தானியப் பாராளுமன்றம், பிரபுக்கள் சபை, பசொப் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை என்பவற்றுடன் பாராளுமன்ற கலறியில் இருக்கும் ஊடகவியலாளர்கள் நான்காம் சபையாக முக்கியம் பெறுகிறார்கள்.
என்.எட்மன்ட் பேர்க்,
(1729 -1797) கருத்துத் தெரிவித்தார். இதனை மேம்படுத்தி, தோமஸ் கலைப் (1795 – 1881) அரசு ஒன்றின் நட்பு துரோகம் என்ற வகையில் பத்திரிகை ஒன்றின் பணி ஊடக சம்பிரதாயத்தில் கூடுதலான கௌரவமான நிலையாகும் என்றார்.
இவர் அவ்வாறு கூறியது ஏனென்றால், சுதந்திரமாகக் கருத்துக்களைத் தெரிவித்து, அரசின் நடவடிக்கை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கண்காணித்தல். அமெரிக்காவில் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் மற்றும் மக்களது இணக்க மற்ற தன்மைக்கு இருக்கும் உரிமை தொடர்பான சித்தாந்தத்தைப் போதிப்பதற்கு அமெரிக்காவின் ஸ்தாபர்களுக்கு எட்மன்ட் பேர்க்கின் கருத்து உதவியாக அமைந்தது. அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும் பொறுப்புத்தன்மையை உறுதிப்படுத்தி, அந்த இரு பிரிவுகளிலுமுள்ள திருப்திகரமற்ற தன்மையை வேறுபடுத்தி, இன்று நட்புத் துரோக அணுகு முறை சமூகத்திற்கு விமர்சன ரீதியாக பங்களிப்பினை வழங்குகிறது.
அணுகு முறையாக இன்று தோமஸ் காலையில் குறிப்பிட்ட ஊடக சம்பிரதாயத்தின் கௌரவமான நிலையில் வியாபிப்பு இன்று பயன்படுத்தப்படும் புலனாய்வு ஊடகவியல், புலனாய்வு அறிக்கையிடல் வளர்ச்சி கண்டுள்ளது.
புலனாய்வு ஊடகவியல் என்பதற்கு சன்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறையின் முன்னாள் பேராசிரியர் லெனான் செலர்ஸ் பின்வருமாறு வரைவிலக்கணமளித்துள்ளார்.
” ஒழுக்க ரீதியான அல்லது சட்ட ரீதியான அங்கீகாரத்தை மீறி, அது ஒளித்து வைத்துள்ள, வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ள தகவல்களைத் தேடி அறிக்கையிடுவதே புலனாய்வு அறிக்கையிடலாகும். இதன்போது மூடப்பட்டுள்ள வாய்களும், மூடப்பட்டுள்ள கதவுகளைத் திறந்து விடுவதற்கு புலனாய்வு ஊடகவியலாளருக்கு இயலுமாகின்றது.
(வலயம் எல். ரிவர்ஸின் புலனாய்வு அறிக்கையிடல்) புலனாய்வு பத்திரிகையியல் என்றதும் எமக்கு அமெரிக்காவில் 1970 தசாப்தத்தில் இடம்பெற்ற வோட்டகேம் சம்பவம் பிரபலமான ஒரு வெளிப்படுத்தலாகும். அதனைப் புலனாய்வு ஊடகக்கலையின் மறுபிறப்பு என ஊடக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் அப்போதைய பலமான அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்சனை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிந்தது. வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதான அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டது தொடர்பாக இரகசிய ஆய்வு நடாத்தி, விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்தனர்.
பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய இந்த நிகழ்வின் பின் புலனாய்வு ஊடகக்கலை வளரத் தொடங்கியது. இலங்கையில் மாற்றுப் பத்திரிகைகளே புலனாய்வு செய்திகளை அறிக்கையிட்டன.
இப்போது நான் கூற முற்படும் புலனாய்வு செய்தி 1965 இல் பதவி வகித்த டட்லி சேனநாயக்க அரசின் ஓர் அமைச்சர் தொடர்பானதாகும். இந்தப் புலனாய்வு செய்தியை அறிக்கையிட்ட இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக வெளியிட்ட ‘அத்த’ என்ற சிங்களப் பத்திரிகையாகும். இந்த செய்தியை எழுதிய ‘அத்த’ பத்திரிகையின் செய்தி ஆசிரியரும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த மூத்த ஊடகவியலாளர் காலஞ்சென்ற நிவ்டன் செனவிரத்ன என்னிடம் தெரிவித்ததாகும்.
அம்பாறையில் நடைபெறும் தகவல் திணைக்களம் நடாத்திய ஊடக கருத்தரங்குச் செல்லும் வழியில் சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் என்னிடம் விளக்கினார். பின்பு அவர் வெளியிட்ட பொதுசனத் தொடர்பு சாதனத்திலும் செய்திக்கலை என்ற சிங்கள நூலிலும் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் புலனாய்வு ஊடக கலைக்குப் பிரவேசித்த முதலாவது பத்திரிகை ‘அத்த’ ஆகும். நான்கு பக்கங்களுடன் வெளியானாலும் பத்திரிகைக்கு பெரும் கிராக்கி இருந்தது.
ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பெறுவதற்கு உத்திகளைக் கையாள வேண்டும். நிவ்டன் செனவிரத்ன குறிப்பிட்ட செய்தியைத் திரட்டுவதற்குப் பயன்படுத்திய உத்திகளை என்னிடம் கூறினார்.
டட்லி அரசில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு அவரது திருமணமாகாத அந்தரங்க செயலாளர் கருத்தரித்திருப்பதாக கிடைத்த தகவலை ஒரு பெரும் பரபரப்பான செய்தியாக வெளியிட்டுள்ளார். இந்த தகவல் கிடைத்தவுடன் இதனைப் பின் தொடர்ந்து ஓர் இரகசியப் பொலிஸார் போன்று தகவல்களைத் திரட்டியுள்ளார். குழந்தை கொழும்பில் ஒரு தனியார் வைத்தியசாலையிலே கிடைத்துள்ளது. இதனை ஒரு பிரபலமான செய்தியாக வெளியிடுவதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் பெறவேண்டும். தந்தை யார் என்பதனை அறியவேண்டும். அமைச்சரா அல்லது வேறொருவரா என்றும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாவிட்டால் கதை ஒரு கட்டுக்கதையாகவே அமையும். ஐ.தே.க. அரசினை அபகீர்த்திக்குள்ளாக்க எடுக்கும் செயலாக அமையும். ஊடகவியலாளர் தீர்வு ஒன்றைத் தேடிக் கொண்டார். அவர் நேரடியாகவே பதிவாளர் நாயகத்துக்கு தொலைபேசியில் பேசினார்.
“நீங்கள் பதிவாளர் நாயகமா பேசுகிறீர்கள்? நான் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர். எமது அமைச்சரின் மனைவிக்கு கடந்த வாரம் குழந்தை கிடைத்தது தனியார் வைத்தியசாலையில். இப்போது, அவரது பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் உங்கள் அலுவலகத்திற்கு வந்து இருக்கும். இன்றே பிள்ளையின் பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும் என்கிறார் அமைச்சர்.”
“அது ஒரு சிறு வேலை தானே! எனக்கு விவரங்களைத் தாருங்கள். நான் எழுதி வைக்கிறேன். ஒரு மணி நேரத்தில் தருகிறேன்.
விபரங்களைத் தந்தபின் ஒரு மணி நேரத்தில் பேசுங்கள்.”
“பிறப்புச் சான்றிதழ் தயார். ஒரு கடிதத் துண்டை கொடுத்து யாரிடமாவது அனுப்பி வையுங்கள்.”
“நன்றி! யாரையும் அனுப்ப மாட்டேன். நானே வருகிறேன்.” என்று ஊடகவியாளர் பதிலளித்தார்.
அமைச்சரின் அந்தரங்கச் செயலாளராக நடித்த ஊடகவியலாளர், தமது ஊடக நிறுவனத்தில் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று, பதிவாளர் நாயகத்தை சந்தித்தார். அக்காலத்தில் பிறப்புச் சான்றிதழை போட்டோ பிரதி பண்ணி உறுதிப்படுத்தும் முறை இருக்கவில்லை. பதிவுப் புத்தகத்திலுருந்து கையால் எழுத வேண்டும். ஊடகவியலாளர் முத்திரைக் கட்டணத்தையும் பதிவுக் கட்டணத்தையும் வழங்க முற்பட்டபோது, பதிவாளர் நாயகம் “அது எனது கணக்கில்” என்று கூறி அதனையும் நிராகரித்தார்.
அடுத்த நாள் ‘அத்த’ பத்திரிகையின் தலைப்புச் செய்தி இவ்வாறு அமைந்திருந்தது.
“அமைச்சரின் இளைய மகன்…”
பிள்ளையின் தாய் அந்தரங்கச் செயலாளர்”
அதனுடன் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் புகைப்படப் பிரதி ஒன்றும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பத்திரிகை வெளியான நாள் காலை வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சக அமைச்சர்கள், அமைச்சர்களது ஒழுக்கம், பண்பு பற்றி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர். அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை இதுவா? குறிப்பிட்ட அமைச்சர் இன்று மாலை 3 மணியளவில் பேசியுள்ளார்.
“ஐசே எனது புதிய சிறுவன் பற்றிய செய்தியை எழுதியது யார்?
“ஏன்?, அமைச்சர் அவர்களே ஏதும் பிரச்சினையா?” ஊடகவியலாளர் சற்றுப் பயத்துடன் கேட்டார்?
“எந்தப் பிரச்சினையும் இல்லை. கதை சரியாகச் சரி. எனக்கு அவரைச் சந்திக்க வேண்டும். நான்கு மணியளவில் அமைச்சுக்கு வாருங்கள் என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
“எதற்கும் தனியாகப் போக வேண்டாம் என்றும் இன்னும் ஒருவருடன் போகுமாறு” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.
ஊடகவியலாளர் மற்றொரு நண்பருடன் கொழும்பு 07 இல் உள்ள அமைச்சுக்குச் சென்றார்.
அமைச்சர் ஊடகவியலாளரை அறிமுகமாக கைகுலுக்கி வரவேற்றார்.
“எதில் வந்தீர்கள்?”
“அலுவலக வாகனத்தில் வந்தேன்.”
“அப்படியாயின் எனது வாகனத்தைப் பின் தொடருங்கள். உங்களுடன் பேசவேண்டும்” என்று கூறி, அமைச்சரது வாகனம் புளர்ஸ் வீதியிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றது.
அமைச்சரின் வீட்டை அடைந்ததும் இருவரையும் வரவேற்று, அமைச்சர் உரையாடலை ஆரம்பித்தார்.
“நான் உங்களுக்கு வரச்சொன்னது நன்றி தெரிவிப்பதற்கே! இன்று அமைச்சரவைக்கு ‘அத்த’ பத்திரிகையையும் எடுத்துக் கொண்டே போனேன். நான் வேண்டுமென்றே சற்று தாமதித்துச் சென்றேன். அமைச்சர்கள் முகத்தில் மட்டுமன்றி, பிரதமரின் முகத்திலும் கேள்விக்குறியிருந்தது.
“இந்த ‘அத்த’ பத்திரிகையில் போட்டப்பட்டிருப்பது என்ன?” என்று பிரதமர் கேட்டார்.
“எந்த தவறும் இல்லை. விடயம் உண்மைதானே” என்று அமைச்சர் பதிலளித்தார்.
“எனினும், இது இப்போது ஒரு பிரச்சினை தானே! இது அமைச்சர்களது ஒழுக்கப் பிரச்சினையே” என பிரதமர் தெரிவித்தார்.
“இது ஒழுக்கப் பிரச்சினையாகுவது எனக்கல்ல: வெளிப் பெண்களுடன் உறவு வைத்து பொறுப்பினை ஏற்காது, வேறாக்களை தந்தையாக்குவோருக்கே!”
“அத்த” பத்திரிகை வெளியிட்டுள்ள பிறப்புச் சான்றிதழை நன்கு பாருங்கள். பிள்ளையின் தந்தையின் தொழில் அமைச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர் திருமணம் ஆனவரா இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் எதனையும் மறைக்கவில்லை. குழந்தையின் தந்தை என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளேன். எனது வம்சாவளிப் பெயரைக் குறிப்பிட்டுள்ளேன்.”
இதனைக் கூறியதும் என்னை திட்டித் தீர்க்க காத்துக் கொண்டிருந்த சக அமைச்சர்களது வாய்க்குப் பேச்சில்லாது போனதாக அமைச்சர் அறிவித்தார்.
பின்பு இருவருக்கும் நன்கு உண்ண, குடிக்க வழங்கி, தன்னைப் பற்றிய செய்தியை வெளியிட்டதற்கு மீண்டும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.