சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Date:

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு போட்டி விலையில் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் மொஹான் சமரநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...