கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் காரணமாக உம்ராவிற்கு வெளிநாட்டவர்கள் செல்லும் நடைமுறைக்கு சவூதி அரசு தற்காலிக தடை விதித்தது.எனினும் தற்போது அங்கு கொவிட் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சில நிபந்தனைகளுடன் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்தவகையில் மக்காவினுடைய தற்போது சூழ்நிலை,அங்கு புனித யாத்திரைக்காக செல்பவர்கள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் அத்தோடு எவ்வாறான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவையும், விளக்கத்தையும் நீண்டகால ஹஜ் , உம்ரா ஏற்பாடுகளில் அனுபவம் வாய்ந்தவரும், வர்த்தகருமான அல்-ஹாஜ் அம்ஜதீன் அவர்கள் வழங்கியுள்ள இந்த தெளிவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு குறிப்பாக மக்காவுக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு உண்மையிலே மிகச் சிறந்த பதிவாக அமைந்துள்ளது.எனவே இப் பதிவை வழங்கிய அல்-ஹாஜ் அம்ஜதீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.