வைத்தியசாலையிலிருந்து ரிஸ்வான் அரையிறுதிக்கு “ஒரு போர் வீரனைப் போல வந்தார்”- மெதிவ் ஹேடன்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான முஹம்மத் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மெதிவ் ஹேடன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.நேற்றைய ஆட்டத்தில் ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ஓட்டங்களை அதிரடியாக அடித்தார்.ஆட்டத்தின் முன்னைய நாள் நுரையீரல் பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனவும் , அவர் எப்படி அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் கலந்து கொள்வார் என சந்தேகம் எழுந்தது ,முழு இரவும் மருத்துவமனையில் ரிஸ்வான் இருந்தார் மறு நாள் ” ஒரு போர் வீரனைப் போல களத்திற்கு வந்தார்” அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது என மெத்யு ஹேடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது ஒரு முரண்பாடு தான் .என் இதயம் எப்போதும் அவுஸ்திரேலியாவுக்காகத்தான் துடிக்கும்.ஆனால் நான் பாகிஸ்தான் அணியில் ஒரு பகுதியாக இருப்பதையே விரும்புகிறேன் என்றார்.

ரிஸ்வானின் நிலை பற்றி அணித்தலைவர் பாபர் அசாம் கூறும் போது, நான் ரிஸ்வானை பார்க்கும் போது சுகமடைந்த தோற்றத்தில் இருந்தார்.நான் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தேன். “என்னால் இன்று விளையாட முடியும் என அவர் கூறினார்.அதே போலவே இன்று அவர் சிறப்பாக  விளையாடியுள்ளார் என்று தெரிவித்தார்.

 

அப்ரா அன்ஸார்

 

 

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...