வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!

Date:

2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை ( 22) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் 2022 ஆம் ஆண்டுக்கான திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.இதற்கமைய வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்றத்தில் 7 நாட்களுக்கு நடைபெறும் விவாதம் நாளை ( 22 ) ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் (23) முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன் சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறும்.

வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்களிப்பு டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...