கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயரிஸ்தானிகர் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன்  உயரிஸ்தானிகர் (HOLGER SEUVERT) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
ஜேர்மன் அரசாங்கத்தினால்  கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் விவசாயத் துறை தொடர்பான அபிவிருத்திக்கு தங்களால் முடியுமான பூரண ஒத்துழைப்பை வழங்க உள்ளதாக  உயரிஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.
குறிப்பாக ஜேர்மன் உயர்ஸ்தானிகர் உடன் ஜெர்மன் வர்த்தக சங்க தலைவரும் இதில் கலந்து கொண்டதுடன் சுமார் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும்,  அதன் மூலம் பிராந்திய அபிவிருத்தி உட்பட ஏற்றுமதி வாய்ப்புகளும் ஐரோப்பிய சந்தைக்கு மேற்கொள்ள ஏதுவாக அமையும் என  ஜேர்மன் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
 ரம்மியமான பிரதேசமாக கிழக்கு மாகாணம் காணப்படுவதாகவும்,  முதலீட்டுக்கு ஏற்ற நிலவரம் இந்த மாகாணத்தில் காணப்படுவது முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இலங்கையினுடைய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்க முடிவதோடு ஏற்றுமதி அபிவிருத்தியும் ஏற்படக்கூடிய நிலவரம் ஏற்படும் எனவும் ஜேர்மன் உயரிஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணம் சுற்றுலா மற்றும் விவசாய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதி வாய்ப்புக்களை கொண்டுள்ளதாகவும் குறித்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஜெர்மன்  தயாராக இருப்பதாக   இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
ஜெர்மன் உயரஸ்தானிகர் நினைவுப்பரிசில் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநருக்கு வழங்கியதுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் ஜெர்மன் உயர்ஸ்த்தானிகரிற்கு இதன்போது நினைவுப்பரிசிலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ வணிகசிங்க,  ஆளுநர் செயலாளர் எல்.பீ.மதனாயக்க உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...