மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்துள்ளது.
கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அகதிகள் உட்பட பலரை ஏற்றிக் கொண்டு மெக்சிக்கோவின் சய்பாஸ் மாகாணம் வழியாக அமெரிக்கா எல்லைக்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் ஆபத்தான வளைவை கடக்க முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே 53 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு , 58 பேர் படுகாயம் அடைந்ததாகவும் நேற்றைய தினம் (10) தெரிவிக்கப்பட்டது.தற்போது 55 உயிரிழப்புக்கள் மற்றும் 105 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை பிரிவில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து குறித்து தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும் மெக்சிகோ இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.