மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசராக விக்கும் அதுல களு ஆராச்சி நியமனம்!

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களு ஆராச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அதுல களுஆராச்சி கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.

விக்கும் அதுல களுஆராச்சி தனது 33 வருட சேவையில் 27 வருடங்கள் நீதவானாக, மாவட்ட நீதிபதியாக, குற்றவியல் மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...