முஸ்லிம் திணைக்களம் நடாத்திய தேசிய மீலாதின் பரிசளிப்பு விழா – 2021!

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியாக நடாத்திய மீலாத் போட்டிகளின் பரிசளிப்பு விழா நாளை (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சாரின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பரிசளிப்பு விழாவில், உவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வில், விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீல், காதர் மஸ்தான் மற்றும் புத்த சாசன மத விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோர் கலந்து கொள்வர்.

இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர் அஹ்கம் உவைஸ், பிரதமரின் முஸ்லிம் விவகாரத்துக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் பர்ஸான் மன்சூர் மற்றும் பிரதமரின் முஸ்லிம் விவகாரத்துக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷைய்ஹ் அஸ்ஸைய்யித் ஹஸன் மௌலானா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேய்ஹ் எம்.எம்.எம்.முப்தி தெரிவித்தார்.இந் நிகழ்வில், உலமாக்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...