அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
19 மாடி குடியிருப்பில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 32 பேர் உயிருக்கு போராடி வருகின்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் லேசான காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.