உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) இரவு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் மார்ச் 19 ஆம் திகதி 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் வெளியிடப்பட்டுள்ளது.