கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலங்குகள் நல சட்டமூலத்தின் வரைவை உடனடியாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.மேற்படி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.