இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

வளிமண்டலவியல் திணைக்களம்

Popular

More like this
Related

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...