ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி;தொடரை கைப்பற்றியது ஆஸி!

Date:

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.


அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்.அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் ​​தொட​ரை ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...