நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல் இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.