இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையே நேற்று சூரிய சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டு முயற்சி மற்றும் பங்குதாரர்கள் உடன்படிக்கையின் விழாவில் கலந்துகொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தின் கூட்டு அபிவிருத்தியில் பங்குகொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மின்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருடன் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.