எதிர்வரும் வாரம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நீட்டிப்பு!

Date:

எதிர்வரும் வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றைய மின்நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது.

மின்வெட்டு காலத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்புகிறது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...