(File Photo)
பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக பல பொதுப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வந்துள்ளது.
இதேவேளை இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் தமது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.