இந்திய கடன் மூலம் ஐந்து நாட்களுக்குள் 80,000 மெற்றிக் தொன் டீசல்!

Date:

இந்திய கடன் வசதி மூலம் கிட்டத்தட்ட 80,000 மெற்றிக் தொன் டீசல் அடுத்த ஐந்து நாட்களில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை ஏறக்குறைய 80,000 மெட்ரிக் தொன் டீசலின் முதல் சரக்காக 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (1) வரவுள்ளது.

அதற்கமைய எஞ்சிய 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் இரண்டாவது கப்பல் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரவித்துள்ளது.

இதேவேளை டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்குவதால் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Popular

More like this
Related

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...