நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 44 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், இந்த சம்பவத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.