முன்னாள் அமைச்சர்கள் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

Date:

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேவின் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய பதாகை ஒன்றிற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த பதாகை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்னாலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை வீசியுள்ளனர்.

இன்றைய தினம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் பாரியளவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...