இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீர்த்தி தென்னகோனினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆளுநராக பதவி வகித்த காலத்தில் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.