தேசிய புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை!

Date:

எதிர்வரும் தேசிய புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் இன்று (9) மற்றும் 17 ஆம் திகதிகளில் விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை காலை 6.00 மணிக்கு வந்தடையவுள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் இரவு 7.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 5.05 க்கு பதுளையை சென்றடையும்.

இதேபோன்று, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இன்று (9) மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்திரம் மற்றுமொரு ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் பதுளையில் இருந்து மாலை 08.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.50 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

பெலியத்தைக்கும் மருதானைக்கும் இடையில் 9,10,11,12,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இத் தினங்களில் மாலை 03.30 க்கு பெலியத்தையில் இருந்து புறப்படும் விசேட கடுகதி ரயில் மருதானையை மாலை 6.57 க்கு வந்தடையும்.

இதேபோன்று 9,10,11,12,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மருதானைக்கும் வெலியத்தைக்கும் இடையில் மற்றுமொரு விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இத் தினங்களில் இந்த ரயில் மருதானையில் இருந்து காலை 6.05 க்கு புறப்பட்டு பெலியத்தையை காலை 9.17 க்கு சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...