நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார்!

Date:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரேரணையை கொண்டு வந்ததையடுத்து நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதில் இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார்.

உடனடியாக பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ராகன்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

பாகிஸ்தானின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடுகிறது. அடுத்த தேர்தல் நடைபெறவுள்ள அக்டோபர் 2023 வரை அந்த நபர் ஆட்சியில் இருக்க முடியும்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ராகன் கான் ஆவார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...