ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்கிறது.
நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இளைஞர்கள் யுவதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
https://twitter.com/SriLankaTweet/status/1512998432251977728