நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு: ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்

Date:

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தற்போதைய மழையுடனான வானிலை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் எனவும் இன்று பிற்பகல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ததன் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தால் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.என். சிறிவர்தன.

அதிக மழையுடன், நீர்மட்டம் நேற்றைய தினம் (9) 66 வீதமாக உயர்ந்துள்ளதாகவும் அதன்படி, தெதுரு ஓயா மற்றும் ராஜாங்கனை ஆகிய இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் மே மாதம் முதல் வார இறுதிக்குள் பயிர்ச்செய்கையை தொடங்குமாறு பணிப்பாளர் நாயகம் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...