அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது. இதேவேளை இலங்கை கலைஞர்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.