‘மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டது’:அரசாங்கத்தில் இருந்து மேலும் மூன்று எம்.பி.க்கள் விலகினர்

Date:

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது தீர்மானங்களை அறிவித்து, தற்போதைய ஆட்சிக்கு முன்னர் ஆதரவளித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அவர்கள் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.க்களாகவே இருப்போம் என்றும் தெரிவித்தனர்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தனர்.
எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

இதேவேளை ஆளும்கட்சியில் இருக்கும்போது தனக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பைசல் காசிம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்த காரணத்தினாலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாலும் தாங்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...