பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் மாணவர்கள் குழு ஒன்று, பாராளுமன்றம் செல்லும் பாதையில் ‘ஹோரு கோ கமா’ என்ற போராட்ட முகாமை அமைத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அமைக்கப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு முகாம் ஆகும்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் நேற்று மாலை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து பாராளுமன்ற வீதி வரை ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்ததுடன், மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றம் செல்லும் பாதையில் முகாமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ உருவாகியுள்ள நிலையில், தற்போது பாராளுமன்ற வளாகத்தில் ‘ஹொரு கோ கம’ உருவாகியுள்ளது.
நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில்இ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அ