நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் அவ்வாறு செய்யாது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை முன்கூட்டியே வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சபாநாயகர் இல்லத்தையும் முற்றுகையிடுவோம் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தையடுத்து ‘என் உடல் நடுங்குவதை நீங்கள் உணர்ந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக சிரிப்புடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.