இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

நாட்டில் வன்முறை நிலைமை நீடிக்குமாயின், சுகாதார கட்டமைப்பின் கொள்ளளவுக்கு அப்பால், நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலைமைக்கு மத்தியில் இந்த அபாயம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, எதிர்ப்பு நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்சமயம் முன்னெடுத்து வரும் பணி பகிஸ்கரிப்பை மேலும் நீடித்துள்ளதாக அதன் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சுகாதார சேவையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...